உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
