Friday, April 3, 2026
HomeUncategorizedசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்.

மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது, வரும், 8ம் தேதி வரை தொடரலாம். சென்னையில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த, மூன்று நாட்களுக்கு, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments