Saturday, March 14, 2026
HomeUncategorizedசென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வெதர்மேன் தகவல்

சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வெதர்மேன் தகவல்

சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.

அவர் பகிர்வு: “இன்று காலை முதல் சென்னை முதல் டெல்டா வரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்யும். வெள்ளிக்கிழமை தூத்துக்குடி-கன்னியாகுமாரி கடற்கரை பகுதிகளுக்கு மழை பெய்யும்.

வங்கக் கடலில் புதிய சுழற்சி உருவாகி வருவதால் சென்னை, புதுச்சேரி, கடலூர், ராமேஸ்வரம் ஆகிய கடலோர மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை தென் தமிழகமும் இதில் இணையும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்புள்ளது. ராமநாதபுரம் – கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழைக்கு வாய்புள்ளது.

சில இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்யும். அதனால் சென்னை மக்கள் இன்று வெளியில் செல்லும் போது குடை மற்றும் ரெயின் கோட் தவறாமல் எடுத்துச் செல்லுங்கள்”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments