வேல்ஸ் பல்கலைக்கழகம் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.
பட்டமளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. புகைப்படங்களில் சிம்புவை பார்த்த ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.
அங்கிள் மாதிரி ஆகிவிட்டார் என்று சொன்ன ஹேட்டர்ஸ் எல்லாம் வாங்கப்பா, எங்க அண்ணன் சின்னப் பையன் மாதிரி இருப்பதை பாருங்கள் என தெரிவித்துள்ளனர்.
கெரியரை பொறுத்தவரை கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அடுத்ததாக பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

