சிபி சத்யராஜ் நடித்த ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கிய இந்த கிரைம் திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
