Sunday, March 8, 2026
HomeUncategorizedசிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிடப்பட்டது

சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிடப்பட்டது

தீபாவளி திருநாளை முன்னிட்டு நெல்லை டவுண் ரத்னா திரையரங்கில் 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிடப்பட்டது !

பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…! என் போன்றோரால் எம் டி என்றே இன்றைக்கும் அழைக்கப்படும் எஸ்.எஸ்.பாலன் இயக்கிய இப்படத்தில் லதா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா ஆகியோர் நடிச்சிருந்தாய்ங்க. பாலிவுட்டின் ஹிட் கதாசிரியர்கள் சலீம்கான் – ஜாவேத் அக்தர் ஜோடி. நட்சத்திர நடிகர்களுக்கு இணையான புகழும் வரவேற்பும் இந்தி சினிமாவில் அப்போது இவர்களுக்கு இருந்துச்சு.

இதில் சலீம் கான், பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கானின் தந்தை!1970 மற்றும் 80-களில் அந்தாஸ், அதிகார், ஷோலே, சீதா அவுர் கீதா,யாதோன் கீ பாரத் உட்பட பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இவர்கள் கதைதிரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள்.

அதில் ஒன்று ‘சஞ்ஜீர்’. அமிதாப்பச்சன், ஜெயா பாதுரி, பிரான் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை பிரகாஷ் மெஹ்ரா இயக்கி இருந்தார். இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தப் படம்தான், தமிழில் ‘சிரித்து வாழ வேண்டும்’ ஆக மாறிச்சு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வாலி, புலமைப்பித்தன் ஆகியோரது வரிகளில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடிச்சுது.

”உலகம் என்னும்..” என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் ஆகிய இரு பாட கர்கள் பாடியிருந்தாய்ங்க.

மேலும், ”எண்ணத்தில் நலமிருந்தால்..” மற்றும் ”ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்” ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இன்னொரு பாடல் ”பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ” என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments