Saturday, March 21, 2026
HomeUncategorizedசிறுதானியங்கள் விற்பனை - அரசாணை வெளியீடு

சிறுதானியங்கள் விற்பனை – அரசாணை வெளியீடு

ரேசன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறுதானியங்களை கொள்முதல் செய்து விநியோகிக்க முடிவு.

சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு.

சிறு தானியங்களின் தயாரிப்பை அதிகப்படுத்த, விலை நிர்ணயம் செய்ய மாநில அளவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments