Monday, March 23, 2026
HomeUncategorizedசந்திரமுகி-2 பூஜையுன் ஆரம்பம்

சந்திரமுகி-2 பூஜையுன் ஆரம்பம்

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் சந்திரமுகி. படத்தில் மனநல மருத்துவராக நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போதுவரை அனைவருக்கும் பிடித்த படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. லைக்கா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை பி வாசுவே இயக்கவுள்ளார்.

படத்தின் நாயகனாக ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார். அவருக்கு த்ரிஷா அல்லது லஷ்மி மேனன் ஜோடியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் மைசூருவில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதில் பி. வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments