Friday, March 6, 2026
HomeUncategorizedசோதனை, ரூ. 41.9 கோடி முடக்கம் - அமலாக்கத்துறை விளக்கம்!

சோதனை, ரூ. 41.9 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை விளக்கம்!

அமைச்சர் பொன்முடி தொடர்பான 7 இடங்களில் சோதனை, ரூ. 41.9 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை விளக்கம்!

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தியதாகவும் 41 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை சாஸ்த்ரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி 2வது நாளாக ஆஜராகியுள்ள நிலையில், நேற்றைய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் பறிமுதல் குறித்து அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியிடம் திங்களன்று இரவு சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி சாஸ்த்ரி பவனில் ஆஜராகி உள்ளார்

இந்த நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி சாஸ்த்ரி பவனில் இன்று ஆஜராகி உள்ளார்.

இந்நிலையில் பொன்முடி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது.

அந்த பதிவில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவரது மகன் டாக்டர் கவுதம் சிகாமணி எம்.பி., வீடு உள்பட 7 இடங்களில் நேற்று காலையில் இருந்து சோதனை நடைபெற்றதாகவும், அதில் முக்கிய ஆவணங்களுடன் ரூ.81.7 லட்சம் ரொக்கமும், 13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் பொன்முடி வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments