வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவிலான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்ட பெருந்திருவிழாவை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் பலர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கியுள்ளனர்.
நான்கு ரத வீதிகளிலும் ஆனித்தேரோட்ட பெருந்திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.

