Home Uncategorized சுந்தர் சி – அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” !

சுந்தர் சி – அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” !

இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்”. முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும், அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் K.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐ ஃபோன் பரிசளித்துள்ளார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C நாயகானாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version