Saturday, March 21, 2026
HomeUncategorizedசுவையான சப்பாத்தி விற்பனை அம்மா உணவகங்களில் மீண்டும் தொடங்கியது

சுவையான சப்பாத்தி விற்பனை அம்மா உணவகங்களில் மீண்டும் தொடங்கியது

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து வருகின்றன. இங்கே இரவு நேரங்களில் இட்லி, சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக, கடந்த 10 நாட்களாக சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.
 
தற்போது தனியார் ஆலையில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் மீண்டும் இரவு நேரங்களில் சுவையான சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments