Sunday, March 22, 2026
Homeசினிமா‘நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி!’ 'பாட்ஷா'ரிலீசான நாள் இன்று!

‘நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி!’ ‘பாட்ஷா’ரிலீசான நாள் இன்று!

இன்னிக்கும் எல்லாருக்கும் பிடிச்ச பாஷா ரிலீஸான தினமின்று.. ஆம்.. 31 வருசங்களுக்கு முன்னாடி – அதாவது 1995 ஆம் வருசம் இதே ஜனவரி 12ல் ரிலீஸான படம் ‘பாட்ஷா’ .

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் அவருடைய ரசிகர்களை தாண்டி பலருக்கும் பேவரைட் ஒன்றாக தற்போது வரை இருக்குது.

‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி!’ நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறையக் கொடுப்பான். ஆனா கை விட்ருவான்’ . ’நான் மூளையைக் கேட்டு வேலை செய்யல…இதயத்தைக் கேட்டு வேலை செய்றேன்’ ‘ஹே… ஹே… ஹே… இத பாரு… உனக்கும் எனக்குந்தான் சண்ட… இந்த பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்குந்தான் சண்ட… இதில நீ சாகணும்… இல்ல நான் சாகணும்… உன் ஆளுங்க சாகணும்… இல்ல என் ஆளுங்க சாகணும். பொதுமக்கள் இல்ல… அப்பாவி மக்கள் இல்ல.’ போன்ற மறக்க முடியாத வசனங்கள், அதிரடி சண்டைக் காட்சிகள், ரஜினியின் மாஸான நடிப்பு என ‘பாட்ஷா’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுது.

இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருது என்பதுதான் ஹைலைட் .

தேவாவின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துச்சு.

குறிப்பாக, “ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்”, “ஸ்டைலு ஸ்டைலு தான்”, “தங்க மகன்”, “அழகு அழகு” போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

ரஜினியின் அறிமுகம் மற்றும் பாட்ஷாவாக அவர் மாறும் காட்சிகளுக்கான பின்னணி இசை, ரசிகர்களின் புல்லரிப்பை ஏற்படுத்திச்சு

கதை, வசனம், நடிப்பு, பாடல்கள், ஒளிப்பதிவு என்று 5 முக்கியப் பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் மார்க் அளிச்சாலும், ஒவ்வொன்றிலும் ஸ்கோர் செய்துடும் என்பதில் இருந்தே இப்பட வேல்யூ தெளிவாகும். கன்னடத்தில், ’கோட்டி கோபா’, வங்காளத்தில்’குரு’, பங்களா தேஷில், ’சுல்தான்’ மற்றும் ’மாணிக் பாட்ஷா’ என்று இருமுறை, என பல மொழிகளுக்கும் பறந்தார் பாட்ஷா.

சூப்பர் ஸ்டாருக்கு, சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுத் தந்துச்சு

திரையரங்குகளில் சுமார் 15 மாதங்கள் ஓடி, வரலாறு படைச்சுது (கட்டிங் கண்ணையா)

‘பாட்ஷா’ படத்தை புரொட்யூஸ் செஞ்சவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது அவர்களது அமைச்சரவைகளில் இடம் பெற்றவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரிச்சவர். அவரது ‘சத்யாமூவீஸ்’ஸின்தயாரிப்புதான்’பாட்ஷா’. ரஜினிக்குஅண்ணாமலை, வீரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்த சுரேஷ் கிருஷ்ணாமூன்றாவதாக இந்தப் படத்தை டைரக்ட் பண்ணினார்.

ஆனா, அவருக்கு முன்பாகஇந்தப் படத்தை இயக்குவதாக இருந்தவர் யாரென்று தெரியுமா?. ஒரு காலச் சூழலில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட மனோபாலாதான்.

மனோபாலா, பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் டைரக்டரா பல படங்களில் பணியாற்றியவர். ‘ஆகாய கங்கை’ என்ற படத்தின் மூலம் இயக்குநரான அவர், ரஜினிகாந்த் நடிப்பில்’ஊர்க்காவலன்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி இருக்கார். அந்தப் படத்தை தயாரிச்சதும்ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ்தான். பிறகு சில விஜயகாந்த் படங்கள், ஹிந்தி படமொன்றுஉள்படசில படங்களை இயக்கிய மனோபாலாவை மீண்டும் அழைச்சாராம் ஆர்.எம்.வீ. அப்படி மனோபாலாஅழைக்கப்பட்டது தெரியாமல், ரஜினி தரப்பு சுரேஷ் கிருஷ்ணாவை பரிந்துரைக்க, பின்னர் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியதும் படம் பெற்ற வெற்றியும் எல்லாருக்கும் தெரியும்.

அதிலும் பாட்ஷா கதை உருவான விதமே இண்டர்ஸ்டிங். 1991 ஆம் வருசம் வெளிவந்த ஹம் எனும் இந்திப் படத்தை லேசாய் தழுவியே பாட்ஷா எழுதப்பட்டிருக்கும். பாட்ஷாவின் இரண்டாம் பாதி முதல் பாதியாகவும், முதல் பாதி இரண்டாம் பாதியாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்க. அதாவது மும்பையை கலக்கும் டான் பாட்ஷா, தன் தம்பி தங்கைகளை காப்பாற்றுவதாக தந்தைக்கு வாக்கு கொடுக்கிறான். அது முதல் பாதி. கொடுத்த வாக்கின் படி சென்னையில் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறான். இப்போது சிறையில் இருந்து வெளியே வரும் ஆன்டனி மாணிக்கத்தை கொல்ல முயல்கிறான். மாணிக்கம் அவனை வீழ்த்துகிறான். இது இரண்டாம் பாதி. கிட்டத்தட்ட இதுதான் ஹம் படத்தின் திரைக்கதை வடிவம். அதன் மிக புத்திசாலித்தனமான மற்றொரு வடிவம்தான் இப்போதும் நாம் பார்த்து கொண்டாடும் பாட்ஷா. இன்னொரு சுவாரசியம், ஹம் திரைப்படத்தில் ரஜினியும் நடிச்சிருப்பார். பாட்ஷாவில் ரஜினியின் தம்பியாக ஒருவர் வருவாரே.. கிட்டத்தட்ட அதேபோன்ற தம்பி பாத்திரத்தில். அமிதாப் பச்சன் தான் அண்ணன்.

ஆனால் பாட்ஷா உருவானது நேரடியாக ஹம் படத்தின் பாதிப்பிலிருந்து அல்ல. இன்னொரு சுவாரசியமான சம்பவத்தின் அடிப்படையில். ஹம் படப்பிடிப்பின் போது, அதன் இயக்குனர் முகுல் ஆனந்த் ரஜினியிடம் ஒரு காட்சியைப் பற்றி சொல்கிறார். அமிதாப் பச்சன் தனது இன்னொரு தம்பியான கோவிந்தாவுக்கு போலீஸ் வேலை வாங்கித் தர உதவுவது போல் இருக்கும் ஒரு காட்சி அது. பின்னர் அந்த காட்சி சரியாக வராது என்று அதை எடுக்காமல் விட்டுவிடுகிறார். ஆனால் ரஜினிக்கு அந்த காட்சி மிகவும் பிடித்துப் போகிறது. நிச்சயம் அதில் ஒரு திரைப்படத்திற்கான கரு இருக்கிறது என்று ரஜினிக்கு தோன்றுகிறது. அண்ணாமலை படப்பிடிப்பின் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ரஜினி அந்த காட்சியைப் பற்றிக் கூற, அவருக்கு அது பிடித்துப் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி அதுவே பாட்ஷாவாக உருவாகிறது. ஹம் படத்திற்காக உருவாக்கப்பட்டு, எடுக்காமல் போய், பாட்ஷா உருவாகக் காரணமான அந்த காட்சி எதுவென்று தெரிகிறதா? தன் தங்கைக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுக்க ரஜினி அந்த கல்லூரி முதல்வரிடம் பேசுவாரே.. ‘என் பேரு மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ அதே காட்சிதான்!இப்படித்தான் உருவாகியிருக்கிறது பாட்ஷா. இப்பேர்பட்ட பாட்ஷா.. ரிலீஸான தேதி இன்று.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments