Saturday, March 14, 2026
HomeUncategorizedமன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெற்றது. இதற்காக லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது மகனான மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள அபே தேவாலயத்தில் இன்று மிக பிரமாண்டமாக அரச பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை வரை இந்த விழா நடைபெற்றது

70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு முடிசூட்டு விழா நடைபெறுகிறது. எனவே இங்கிலாந்து விழாக்கோலம் பூண்டுள்ளது.

 கோலாகலமாக விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 விழாவில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் உள்ளிட்டவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்தார் பிறகு மூத்த மதகுருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்பட்டது. தொடர்ந்து ராணியாக கமிலா முடிசூட்டிக்கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments