Skip to main content

யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்!

யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்: இன்று (ஆகஸ்ட் 1) முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ (NPCI) ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டுவருகிறது.

அதன்படி பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும்.