Monday, April 6, 2026
HomeUncategorizedசென்னை மாநகராட்சி முதன் முறையாக,  போன ஆண்டு புது முயற்சி ஒன்றை கையில் எடுத்தது. 

சென்னை மாநகராட்சி முதன் முறையாக,  போன ஆண்டு புது முயற்சி ஒன்றை கையில் எடுத்தது. 

அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என்ரு அறிவித்து அந்த பொருட்களை பெற்றார்க:.

இதுகுறித்து, அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் சொன்னது,

“சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் வரும் 14ம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் இன்று  ஜனவரி 7 முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நாளை முதல் வழங்கலாம்

இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். 

மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள, இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எறியூட்டும் பொருட்களில் புகை மண்டலமாக வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்

சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு செயல்படுத்த முன்வந்தது .

அதற்கு அப்போது போதிய வரவேற்பு இல்லை என்றாலும் இந்தாண்டும் மேற்கண்ட அறிவிப்புடன் சென்னை கார்ப்பரேசன் மட்டுமின்றி சகல மாநகராட்சி, நகராட்சிகளும் கழிவுகளைச் சேகரிக்க  களமிறங்க வேண்டுமென ஆந்தை ரிப்போர்ட்டர் குழு சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments