Thursday, May 21, 2026
Homeசெய்திகள்சென்னை ஆதிக்கம் அதிகம்: விஜய் அமைச்சரவையில் மாவட்ட வாரி அதிகாரப் பகிர்வு!

சென்னை ஆதிக்கம் அதிகம்: விஜய் அமைச்சரவையில் மாவட்ட வாரி அதிகாரப் பகிர்வு!

தமிழகத்தில் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், மாவட்டவாரியான அதிகாரப் பகிர்வு மற்றும் பிராந்தியப் பிரதிநிதித்துவம் குறித்த முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன.

மொத்தமுள்ள 33 அமைச்சர்களில் தலைநகர் சென்னைக்கு 7 அமைச்சர்களுடன் சிம்ம சொப்பன முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சூழலில், நாமக்கல்லுக்கு 3 இடங்களும், காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை (இதில் 1 காங்கிரஸ்), விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன;

இவர்களுடன் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சேலம், திருப்பூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி (காங்கிரஸ்) ஆகிய 11 மாவட்டங்களுக்கு தலா 1 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய அமைச்சரவை அமைப்பில் தமிழகத்தின் சரிபாதி மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது;

அதன்படி, நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் இந்த அமைச்சர் பட்டியலில் இடம் கிடைக்காதது அந்தந்தப் பிராந்திய மக்களிடையேயும் கட்சி வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments