Friday, April 3, 2026
Homeசெய்திகள்சென்னை எழும்பூர் நடைமேடை பணி முன்கூட்டியே முடிவு!

சென்னை எழும்பூர் நடைமேடை பணி முன்கூட்டியே முடிவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவடைந்துள்ளன.

ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்க வேண்டிய வழக்கமான ரயில் சேவைகள், பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதால் இன்று (ஏப்ரல் 3) முதலே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கிடையே தற்காலிக ரயில் கால அட்டவணை ரத்து செய்யப்பட்டு, கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணையின்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாகப் போதிய ரயில்கள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொண்ட லட்சக்கணக்கான பயணிகள், தற்போது ரயில் சேவை சீரடைந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments