Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்புதுப்புது திட்டங்கள்.. கவர்ச்சிகரமாக மோசடி செய்து ரூ.60 கோடி சுருட்டிய பெண்கள் கைது!

புதுப்புது திட்டங்கள்.. கவர்ச்சிகரமாக மோசடி செய்து ரூ.60 கோடி சுருட்டிய பெண்கள் கைது!

நகை கடையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து ரூ.60 கோடி வரை மோசடி செய்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேரில் ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த நகைக்கடை சார்பில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிமுகம் செய்தனர். பாதி விலையில் தங்க நகை திட்டம்,  ஒரு லட்சம் முதலீடு செய்தால் வாரந்தோறும் மூன்று சதவீதம் வட்டி கொடுக்கப்படும் என்றும் பல திட்டங்களை அறிவித்தவுடன் பலரும் அதை நம்பி முதலீடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் முதலீட்டுத் தொகையை கோடி கணக்கில் கொட்டினர். ரூ.60 கோடி வரை சுருட்டிய பின்,  நகைக்கடை  நிறுவனம் முதலீடு செய்த அவர்களுக்கு உரிய முறையில் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதேபோல் பாதி விலையில் தங்க நகை திட்டம் என்ற பெயரில் பல ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடத்தில் புகார் அளிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பானுவள்ளி வயது (56), சுஜாதா(51), திவ்யா(36), மற்றும் சந்தோஷ் (35) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடத்தில் விசாரணை நடந்து வருகின்றது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments