Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்வகுப்பறையில் அரிசிகளை சுத்தம் செய்யும் குழந்தைகள்.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

வகுப்பறையில் அரிசிகளை சுத்தம் செய்யும் குழந்தைகள்.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளின் அறிவை வளர்த்து, எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஒரு இடமாகும். அப்படி ஒரு புனிதமான இடத்தில் இருந்து கொண்டு ஆசிரியர்களே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.
 சமீபத்தில் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது, அந்த பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்பதற்கு பதிலாக அரிசி, கோதுமையில் கல், தூசிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த சமயத்தில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வுக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்ததால் அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 அந்த வீடியோவில் கல்வி அதிகாரி வகுப்பறைக்குள் நுழைகிறார். அங்கே ஆசிரியர் தனது மேஜையில் அரிசியை பரப்பி வைத்து கல், குருணை தூசிகளை பொருக்கி சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார். அதுபோலவே வகுப்பறையில் ஆங்காங்கே குழந்தைகள் அமர்ந்து அரிசி மற்றும்  கோதுமைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். கல்வி அதிகாரி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று குழந்தைகளிடம் கேட்கிறார். அரிசிய சுத்தம் செய்வதாக குழந்தைகளும் கூறுகின்றனர். அப்போது ஆசிரியர் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் பல கடுமையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments