ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியில் சீனாவை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்த்து, தற்போது இந்தியாவில் 25 சதவீத உற்பத்தியைச் செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2024-ல் 36 மில்லியனாக இருந்த உற்பத்தி, 2025-ல் 53 சதவீதம் அதிகரித்து 55 மில்லியனாக உயர்ந்துள்ளது; அதாவது உலகில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு ஐபோன்களில் ஒன்று இப்போது இந்தியாவில் தயாரானதாகும்.
குறிப்பாக, லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 17 வரிசையின் அனைத்து போன்களும் – ‘ப்ரோ’ மற்றும் ‘ப்ரோ மேக்ஸ்’ உட்பட – இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் (PLI) மற்றும் ஃபாக்ஸ்கான், டாடா போன்ற நிறுவனங்களின் பங்களிப்பால், இந்தியா இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.
