சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களைத் தாங்களே சமநிலைப்படுத்திக் கொள்ளும் (Self-balancing) திறன் கொண்ட அதிநவீன ‘சுய-இயக்க இருசக்கர மின் வாகனங்களை’ (Self-driving 2-wheelers) அறிமுகப்படுத்தி போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வாகனங்கள் தானாகவே பயணிப்பது மட்டுமின்றி, வழியில் உள்ள தடைகளைக் கண்டறிந்து விலகிச் செல்லவும் (Obstacle avoidance), உரிமையாளர் அழைத்த இடத்திற்கு ரிமோட் மூலம் வரவும் (Remote summoning) கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அன்றாட அலுவலகப் பயணம் மற்றும் குறுகிய தூரப் பொருட்களை விநியோகிக்கும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள், எதிர்கால நகர்ப்புற போக்குவரத்தை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஓட்டுநர் இன்றி சரக்குகளை டெலிவரி செய்யும் பணிகளில் இவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என சீன நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

