Home செய்திகள் முகத்தில் குண்டு பாய்ந்தும் போராடிய வீரர்! கீர்த்தி சக்ரா நாயகனுக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!

முகத்தில் குண்டு பாய்ந்தும் போராடிய வீரர்! கீர்த்தி சக்ரா நாயகனுக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற கடுமையான மோதலின் போது, முகத்தில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த போதிலும், எவ்வித பின்வாங்கலுமின்றி வீரத்துடன் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளை வீழ்த்தி வெற்றி கண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் மிகச்சிறந்த வீரத்தைப் பாராட்டி, நாட்டின் உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது அண்மையில் வழங்கப்பட்டது.

தேசத்திற்காகத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய இந்தத் தமிழ்நாட்டு வீரரின் தியாகத்தையும் துணிச்சலையும் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கி, பொன்னாடை போர்த்தித் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version