Tuesday, June 9, 2026
Homeசெய்திகள்பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் ஜோசப் விஜய்!.. செம ஜாலி மொமெண்ட்ஸ்!

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் ஜோசப் விஜய்!.. செம ஜாலி மொமெண்ட்ஸ்!

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு – முதலமைச்சர் விஜய் கௌரவிப்பு!

நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘நார்வே செஸ் 2026’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கி கௌரவித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் இத்தொடரில் நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்தியதுடன், இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரையும் அதிரடியாக வென்று இந்த அரிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை 20 வயதான பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

தமிழகத்திற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இவரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய், இந்த இமாலய வெற்றி எதிர்கால இளம் தலைமுறையினருக்குப் பெரும் உத்வேகமாக அமையும் என்றும் பாராட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments