நம்ம கோலிவுட்டில் ஏகப்பட்ட ஹீரோக்கள் இருந்தாலும், நகைச்சுவை நாயகர்களாக மக்கள் மனங்களை ஆட்சி செய்தவர்கள் வெகுசிலரே. நாகேஷிற்கு பிறகு கவுண்டமணி, செந்தில் தமிழ்சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுதான் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் “வைகைப்புயல்” வடிவேலு. அன்று தொடங்கி இன்று வரையிலும், மக்களின் கவலைகளுக்கு சிரிப்பு ’சிரப்’என்ற மருந்தை அளிக்கும் சித்தனாக வாழ்ந்து கொண்டிருக்கும் “வைகைப்புயல்” வடிவேலுவின் பிறந்த நாள் இன்று.
நாயகர்கள் பேசும் பஞ்ச் வசனங்களை காட்டிலும், வடிவேலு பேசிய காமெடி வசனங்களைதான் பலரும் பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அவரது காமெடி வசனங்களிலே “ இப்பவே கண்ண கட்டுதே” “ ஏன்டா..! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிகிட்டு இருக்குது..” “ வேணாம்… வலிக்குது… அழுதுடுவேன்…” “ மாப்பு…மாப்பு… வச்சுட்டான்யா ஆப்பு…” “ நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..” “ ஆணியே புடுங்க வேண்டாம்..” “ பில்டிங் ஸ்ட்ராங்…. பேஸ்மட்டம் வீக்கு..” “ பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருஞ்சு..” “ எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது” “ போங்க தம்பி… போங்க…” “ எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்… ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க..” நானும் எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது” என்று வடிவேலு பேசிய காமெடி வசனங்கள் நூற்றுக்கணக்கானவை மிகவும் பிரபலம். இன்றளவும் சமூக வலைதளங்களை வடிவேலு பேசிய காமெடி வசனங்களும், காமெடி காட்சிகளுமே ஆட்சி செய்கிறது என்பதே உண்மை.

அதேபோல அவர் ஏற்று நடித்த நாய் சேகர், கான்ட்ராக்டர் நேசமணி, சூனா பானா, பிச்சுமணி, தீப்பொறி திருமுகம், வண்டுமுருகன், புல்லட் பாண்டி, குப்பைத் தொட்டி கோவிந்தசாமி, வீச்சருவா வீராசாமி, சின்ன பகவதி, மாயி மொக்கை சாமி, சச்சின் அய்யாசாமி, ஆறு சுமோ, வெள்ளைச்சாமி, பாடிசோடா, பிகில் பாண்டி, படித்துறை பாண்டி, சலூன்கடை சண்முகம், அலார்ட் ஆறுமுகம், தேங்காய் கடை தேனப்பன், ஸ்டைல் பாண்டி என்று அவர் ஏற்று நடித்த மக்களிடம் பிரபலமான கதாபாத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அப்பேர்பட்டவர் ரீ எண்ட்ரீ ஆகி எடுபடாத நிலையிலும் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுது.
இச்சூழலில் வடிவேலு அண்ணாச்சிக்கு 66 வது பிறந்த நாள் வாழ்த்துகளை ஆந்தை குழுமம் சார்பில் தெரிவித்து கொள்வோமே.

