Friday, February 27, 2026
Homeஉலகம்அமெரிக்க படகு மீது கியூபா படையினர் தாக்குதல்.. 4 பேர் பலி!

அமெரிக்க படகு மீது கியூபா படையினர் தாக்குதல்.. 4 பேர் பலி!

FILE IMAGE

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மூலம் கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்தவர்கள் மீது அந்நாட்டு கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தீவொன்றுக்கு அருகில் அதிவேகப் படகில் வந்தவர்கள் மீது தமது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments