உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “திரைப்படத்தின் முதல் பார்வை
இத்திரைப்படத்தை கே எஸ் கிஷன் எழுதி இயக்குகிறார் பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார்
இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்
இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை கங்கை அமரன் எழுத விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் உலகநாயகன் கமலஹாசன்
டார்க் ஜெயன்ட் திரைப்படம் ஒரு ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்தனர்

