“சமீபத்தில் ‘ராயன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த வருடம் அந்தப் படத்தை விடத் தகுதியான பல படங்கள் நிச்சயமாக இருந்தன; அந்தப் படங்களின் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதை நான் முழுமையாக மதிக்கிறேன்.
‘அது ஒரு கனாக்காலம்’ படம் ரிலீஸான போது எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்கள், ஆனால் கிடைக்கவில்லை. அடுத்து ‘புதுப்பேட்டை’, ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘ரான்ஜனா’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’ என இத்தனை படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று பலர் பேசினார்கள், ஆனால் அமையவில்லை.
சில விஷயங்கள் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அமையாது, அது தானாகத்தான் அமைய வேண்டும். ‘ராயன்’ படத்திற்கான எங்கள் உழைப்பு உண்மையாலும்தான். ஆனால், இத்தனை படங்களுக்கு எனக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்று யாருமே கேட்கவில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் மனக்கஷ்டம் ஏற்படும்போது, நமது வீட்டிலேயே இருக்கும் இன்ஸ்பிரேஷனைத் தேட வேண்டும். லிங்கா சின்ன வயதாக இருக்கும்போது என்னுடன் வீடியோ கேம் விளையாடுவான்.
நான் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருந்த ஒருநாளில், களைப்பாகி ‘நாளை விளையாடலாம்’ என எழுந்தபோது, ‘நான் இன்னும் ஜெயிக்கவே இல்லையே, உட்காருங்க’ என்றான். எத்தனையோ சிக்கல்கள் வந்தாலும் ஜெயிக்கிற வரைக்கும் மோதிப் பார்த்திட வேண்டும் என்ற பாடத்தை அவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
அஜித் சார் சொன்னது போல, நீயாகத் தோற்றுவிட்டாய் என்று ஒப்புக்கொள்ளும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது. மேலும் லிங்கா, ‘இஃப் யூ ஆர் பேட், ஐ அம் யுவர் டேட்’ (If you are bad, I am your dad). இவ்வளவு பேர் ஒன்னு கூடியிருக்கும் இந்த ஒற்றுமைக்கு ஒரு பவர் இருக்கு, அதற்கு ஒரு நற்பணி சார்ந்த நோக்கம் தர வேண்டும்.
சும்மா பிறந்தநாளுக்குப் பார்த்தோம் என்று இல்லாமல், உங்கள் ஏரியாவில் யாருக்கு என்ன தேவை என்று புரிந்து உதவி செய்து கை கோர்க்க வேண்டும். இங்கிருந்து செல்லும்போது கவனமாகவும், பைக் ரேஸ், ஓவர்டேக் செய்யாமல், ‘இந்த மாதிரி பசங்க இருக்கணும்டா’ என்று பெயர் வாங்கித் தரும்படி பத்திரமாக வீடு போய் சேர வேண்டும்” என்று பேசினார்.
