Wednesday, February 4, 2026
HomeUncategorizedகுபேரா படம் எப்படி இருக்கு? பார்க்கலாம் வாங்க!

குபேரா படம் எப்படி இருக்கு? பார்க்கலாம் வாங்க!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்கியராஜ் மற்றும் ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் குபேரா படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் அமர்க்களமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குபேரா படம் நிச்சயம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்றும் தனுஷ் ரசிகர்கள் தீவிரமாக நம்புகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படம் எப்படி இருக்கு என இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம்.

kubera

கொடுமைக்கார கோடீஸ்வரனான நீரஜ், பிச்சைக்காரர்களை பினாமியாக்கி தனது பணத்தை எல்லாம் மணி லாண்டரிங் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அந்த பணியை அவர் தீபக்கை (நாகார்ஜுனா) வைத்து செய்ய வைக்கிறார். இதில், சிக்கும் தேவா (தனுஷ்) 10 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி, ஏழைகளை பணக்காரர்களாக்கும் முயற்சியில் சமீராவை உடன் வைத்துக் கொண்டு செய்கிறார். தேவாவை தேடிப் பிடித்து தீர்த்துக் கட்ட நீரஜ் ஆட்களை அனுப்ப தேவா தப்பித்தாரா? ஏழைகள் வாழ்வு என்ன ஆனது என்பது தான் இந்த குபேரா படத்தின் கதை.

kubera

ரமேஷ் பாலா தனுஷின் குபேரா படத்துக்கு 4.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டின் ஆகச்சிறந்த படமாக குபேரா இருக்கும் என்றும் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என 3 பேரும் தங்கள் நடிப்பை முழுமையாக கொடுத்துள்ளனர். சேகர் கம்முலாவின் ரைட்டிங் மற்றும் டைரக்‌ஷன் தான் படத்தை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

kubera

தக் லைஃப் பட தோல்விக்கு பிறகு எந்த படத்தின் மீதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில், குபேரா பட டிக்கெட் புக்கிங்கும் டல் அடித்தது. ட்ரைலர், Preview ஷோ பார்த்த பிறகு, பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிக்கொண்டு இருக்கின்றது. மெல்ல மெல்ல சூடு பிடித்துள்ளது டிக்கெட் விற்பனை. தனுஷின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

kubera

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments