Saturday, May 9, 2026
Homeசெய்திகள்தமிழக அரசியலில் புதிய திருப்பம்: ஆளுநரைச் சந்தித்த தினகரன்!

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: ஆளுநரைச் சந்தித்த தினகரன்!

தமிழக அரசியலில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரைச் சந்தித்துத் தனது புகாரை அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கத் தனது கட்சி ஆதரவு அளிப்பதாகக் கூறி, மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தைத் தனது உதவியாளர் மூலம் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மாலை 6.30 மணியளவில் தனது கடிதத்தில் கையெழுத்திட்ட காமராஜைத் தற்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், ஆனால் ஊடகங்களில் அமமுக விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக வரும் செய்திகளைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சமர்ப்பித்த ஆதரவுக் கடிதம் போலியானது அல்லது குதிரை பேரத்தின் மூலம் பெறப்பட்டது என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், இது குறித்து ஆளுநர் தீவிர விசாரணை நடத்தி இத்தகைய முறைகேடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments