‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இந்நிலையில்,இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நாளை ஜூலை 10ம் தேதி சென்னையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்க்ஷியும் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக இந்தாண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்… இந்த ‘எல் ஜி எம்’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இன்று டிரைலர் & இசை வெளியீட்டுக்கு தோனியே வந்திருப்பதால் நகரெங்கும் ஒரு அதிர்வலை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல

