Home Uncategorized தவிர்க்கமுடியாத”பிதாமகன்” இயக்குனர் பாலா பிறந்தநாள் இன்று!

தவிர்க்கமுடியாத”பிதாமகன்” இயக்குனர் பாலா பிறந்தநாள் இன்று!

முதல் படத்திலேயே தேசிய விருது. அழுக்காக இருப்பவரும் கூட படத்தின் ஹீரோ தான், ஹீரோயின் வெள்ளையா ஸ்லிம்மா இருக்கனும் அவசியம் இல்லை. பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல் இருந்தால் போது அதுவும் ஒன்னு, ரெண்டு தான் என்று தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த பரிமானத்தையும் மாற்றி வேறு உலகத்தை கண்ணில் காட்டியவர் தான் பாலா.

இதுவரை  பத்துப் படங்களை இயக்கியிருக்கிறார் பாலா. அவற்றில் முதல் நான்கு படங்கள் பெற்ற வரவேற்பை அடுத்த நான்கு படங்கள் பெறலை. 

ஆனால் ஒரு இயக்குநராக பாலாவின் முத்திரை இல்லாத படங்கள் இல்லவே இல்லை. பாலாவின் படங்கள் அனைத்துமே ரசிகர்கள், விமர்சகர்கள், மொழி எல்லைகளைக் கடந்த சினிமா ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன.  

அதற்குக் காரணம் கதை, கதைக்களம், திரைக்கதை, படமாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து ஆகச் சிறந்த நடிப்பைப் பெறுவது. இசை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என அனைத்து அம்சங்களும் பாலா படங்களில் நேர்த்தியுடன் இருக்கும். ஒரு இயக்குநராக பாலாவுக்கு சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தனித்தன்மை வாய்ந்த பார்வையும் சிறந்த ரசனையும் இருந்ததே.

பதினாறு வயதினிலே படத்துக்கு ஈக்வலா   இவரின் சேதுவுக்கு எத்தனை பிரிவியூ ஷோ நடந்திருக்கு தெரியுமா’ ? ஆம் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்  இவர்  படத்தை திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பாகப் பார்த்தாய்ங்க. ’நல்லாயிருக்கு.. ஆனா ஓடாது’ என்பதே பலரது பதிலாக இருந்துச்சாம். 

அதனைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தால், இன்று பாலா என்றொரு இயக்குனரை நாம் அறியாமலேயே போயிருப்போம்.

தொடக்க காலத்தில் அசாதாரணமான மனிதர்கள் குறித்த கதைகளை ஒரு சாதாரண ரசிகன் பார்வையிலேயே படைத்தார் பாலா. 

ஆனால், அதன்பிறகான படங்களில் அந்த பார்வை நீர்த்துப் போய்விட்டதென்னவோ நிஜம்

இதை எல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் பாலாவுக்கு தனி இடம் உண்டு. அதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. 

அதேபோல பாலாவின் படங்களுக்கும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு உண்டு. இதை யாரும் சொல்லாமல் தவிர்க்க முடியாது. 
 

Exit mobile version