சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் வருடம் தோறும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்படுவது வழக்கம். இதில் அவருடன், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர், நடிகைகள், தொடர்பு கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் அவருடன் பயணித்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் புகழ் அஞ்சலியை மலர் தூவி அஞ்சலி செலுத்துவதோடு, அவருடைய திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்வை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்திரன் உதவியாளர் திரு கவிதாலயா மோகன் அவர்கள் வருடம் தோறும் சிறப்பாக செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, சென்னை மயிலையில் பாரம்பரியமிக்க பாரதிய வித்யா பவன் ஆண்டுதோறும் பெருமையாக கொண்டாடும் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் பிறந்தநாள் நாடக விழா இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்குவது பாரதிய வித்யா பவனின் தனித்துவமான விருந்தோம்பல்.
விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்குவது பாரதிய வித்யா பவனின் தனித்துவமான விருந்தோம்பல்.
வாருங்கள். இயக்குநர் சிகரத்தின் 96-வது பிறந்த நாளை இன்று தொடங்கி 12-ந் தேதி வரை கோலாகலமாக கொண்டாடுவோம்.
