Tuesday, March 31, 2026
Homeசெய்திகள்சட்டமன்றத் தேர்தல் 2026: தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், சின்னங்கள் குறித்த...

சட்டமன்றத் தேர்தல் 2026: தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், சின்னங்கள் குறித்த முழு விவரங்கள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சின்னங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி நேரடியாக 164 இடங்களில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க-வுடன் இணைந்து தோழமைக் கட்சிகள் 11 இடங்களில் போட்டியிடுவதால், மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களமிறங்குகிறது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், தே.மு.தி.க-விற்கு 10 இடங்களும், வி.சி.க-விற்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 இடங்களும், ம.தி.மு.க-விற்கு 4 இடங்களும் (3 உதயசூரியன், 1 பம்பரம்) வழங்கப்பட்டுள்ளன.

ஐ.யு.எம்.எல், கொ.ம.தே.க, ம.ம.க ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சிக்கு தலா 1 இடமும் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க

மறுபுறம், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க நேரடியாக 166 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகள் 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 172 இடங்களில் அந்தச் சின்னம் இடம்பெறுகிறது.

பா.ஜ.க தலைமையிலான அணியில் த.மா.கா மற்றும் த.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தாமரை சின்னத்தில் மொத்தம் 33 இடங்களில் (பா.ஜ.க 27, த.மா.கா 5, த.ம.மு.க 1) போட்டியிடுகின்றன. பா.ம.க-விற்கு 18 இடங்களும் (மாம்பழம்), அ.ம.மு.க-விற்கு 11 இடங்களும் (குக்கர்) ஒதுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, இந்திய ஜனநாயகக் கட்சி (2), புரட்சி பாரதம் (1), சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் (1), புதிய நீதிக் கட்சி (1) மற்றும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி (1) ஆகிய கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இரு பெரும் கூட்டணிகளும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து தேர்தல் களத்தில் தீவிரமாகத் தங்களது பரப்புரையைத் தொடங்கியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments