Thursday, February 19, 2026
Homeசெய்திகள்அமித்ஷா-எடப்பாடியின் மெகா கூட்டணி கனவில் பேரிடி; உறுதியானது திமுக - தேமுதிக கூட்டணி!

அமித்ஷா-எடப்பாடியின் மெகா கூட்டணி கனவில் பேரிடி; உறுதியானது திமுக – தேமுதிக கூட்டணி!

தமிழக அரசியலில் புதிய நிகழ்வாக, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய இன்று அறிவாலயம் வந்துள்ளார் பிரேமலதா

அமித்ஷா-எடப்பாடியின் மெகா கூட்டணி கனவில் பேரிடி; உறுதியானது திமுக – தேமுதிக கூட்டணி :

  • NDA கூட்டணிக்கு தேமுதிக உறுதியாக வரும் என எதிரபார்த்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா விற்கு இது பெருத்த ஏமாற்றம். வலிமையான கூட்டணி அமையும் என எதிர்பார்த்த அதிமுக-பாஜக வின் எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது.
  • அதிமுக கூட்டணியா -திமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார்.
  • ஈஷா மையத்தில் நடந்த மகா சிவ ராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியோடு இணைந்து பிரேமலதா கலந்து கொண்டதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் கூட்டணி வலிமையாகும் என செய்திகள் பரவிய நிலையில் தற்போது பிரேமலதாவின் முடிவு பாஜக-அதிமுகவிற்கு நிச்சயம் பின்னடைவாகவே பார்க்கப்படும்.
  • 2011 தேர்தலில் தேமுதிக அதிமுக உடன் கூட்டணி அமைத்ததால் அந்த தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுக.

*2019, 2020களில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா தருவதாக வாக்குறுதி தந்து தரவில்லை என்பது தேமுதிகவிடம் அதிருப்தியாக இருந்தது. அதற்கு இப்போது பிரேமலதா எடப்பாடிக்கு பாடம் புகட்டியுள்ளார்.

*சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  • 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தது 5000 முதல் 25,000 வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிகவை சேர்ப்பதன் மூலம் 200 தொகுதிகளை வெல்ல முடியும் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வந்தது.
  • தற்போது தேமுதிகவின் வரவு திமுக கூட்டணிக்கு கூடுதல் பலன். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஏகதேசம் உறுதி செய்து விட்டதாக கருதப்படுகிறது.
  • ஏற்கனவே 42-45% வாக்கு வங்கி வைத்துள்ள திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக இணையும் போது 200 தொகுதிகளில் வெற்றி என்ற ஸ்டாலினின் அரசியல் கணக்கு நிறைவேறும் சூழல் உறுதியாகிறது.
  • தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் தேமுதிகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை பிரேமலதா எடுத்துள்ளதாக தெரிகிறது . MLA, MP கள் இல்லாத நிலையை மாற்றி வரும் தேர்தலில் கணிசமான MLA களை சட்டமன்றத்திற்கு அனுப்பவும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கான MP களை உறுதி செய்வது மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வென்று கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை அதிகரிப்பது என அடுத்த ஐந்தாண்டுக்குள் தேமுதிகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றவே இம்முடிவை பிரேமலதா எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • வட தமிழ்நாட்டின் வலுவான பாமக இரண்டாக பிரிந்து வலுவற்ற சூழலில் தேமுதிக மீண்டும் வட தமிழ்நாட்டில் தனது இடத்தை பிடித்து கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
  • அதே போல தென் தமிழ்நாட்டிலும் அமமுக மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அதுவும் கூட முழு மனதுடன் அமையவில்லை. சசிகலா- ஓபிஎஸ் ஆகியோர் இன்னும் பிரிந்தே உள்ளனர். ஆகவே கள்ளர் சமூக வாக்குகள் கொஞ்சம் NDA கூட்டணிகக்கு செல்லுமே தவிர இதர முக்குலத்தோர் வாக்குகள் NDA கூட்டணி மீது அதிருப்தியில் உள்ளனர் ஆகவே அந்த பகுதியிலும் தேமுதிக தன்னை இந்த தேர்தலில் வலுப்படுத்தி கொள்ள முடியும்.
  • தேமுதிக விற்கு பக்கபலமாக இருக்க கூடிய தெலுங்கு பேசும் மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளும் சிதறாமல் தேமுதிக விற்கு இம்முறை கிடைக்கும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக தெரிகிறது.
  • 2011 எதிர்க்கட்சி அந்ததிஸ்த்து பெற்ற தேமுதிக இடையே சரியான கூட்டணி அமைக்காமல் வலுவிழந்தது தற்போது திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் மூன்றாவது பெரிய மாநில கட்சியாக உயரும் வாய்ப்பு தேமுதிக விற்கு கிடைக்கும்.
  • திமுக கூட்டணி மேலும் வலுவடைந்து 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைய தேமுதிக உதவும் – தேமுதிக வின் இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸை தொடங்க திமுக கூட்டணி உதவும் ஆகவே இத் பிரேமலதாவின் அரசியல் சாதுர்ய முடியாக பார்க்கப்படுகிறது. இரு பக்கமும் win – win சூழ்நிலை என்பதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments