Sunday, March 22, 2026
HomeUncategorizedலெமன் ஜூஸ் குடிச்சா போதுமா? அதுல இருக்க நல்ல விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க!

லெமன் ஜூஸ் குடிச்சா போதுமா? அதுல இருக்க நல்ல விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க!

உலகம் முழுவதும் நாகரிகம் பெற்ற அனைத்து மக்களும் எலுமிச்சை பழத்தை அறிந்திருக்கின்றனர். மனித குல பண்பாடுகள் மற்றும் நாகரிகங்கள் வளர்ச்சி அடையும் முன்னரே இப்பழம் உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்துள்ளது. உலகளாவிய உணவு முறைகளில் இப்பழத்தின் அவசியம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் முன்னோர்கள் நோய்கள் உடலை தாக்காமல் இருக்க எலுமிச்சை பழத்தை உணவு முறைகளில் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் எலுமிச்சையை உணவு, ஜூஸ், சாறு, ஊறுகாய் என பல வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சிறப்புமிக்க எலுமிச்சை பழத்தை நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் காண்போம்.

எலுமிச்சை பழத்தின் சத்துக்கள்:

எலுமிச்சை பழம் புளிப்பு சுவையுடையது, இதில் விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளன. விட்டமின் சி எலும்புகளின் உறுதிக்கும், ரத்த ஓட்டத்தின் சீர்மைக்கும் உதவும் ஒரு விட்டமின். இரும்புச் சத்து உடலுக்கு அவசியமான இரும்புச் சத்துக்களை வழங்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பைட்டோ கெமிக்கல் பண்புகள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும், முக்கியமாக உடல் சோர்வு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற நோய்களை தடுக்கும். இரும்புச் சத்து ரத்த சோகையை தடுக்கும், ரத்தக்குழாய்களில் கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய நோய்களை தடுக்கும். இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை உறுதி செய்து, உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல ஊட்டச்சத்துக்களை பெறும். கல்லீரலுக்கு வரும் பேட்டி லிவர் நோயை தவிர்க்கும், பொட்டாசியம் சத்து நரம்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமை அளிக்கும்.

தினமும் காலை வெந்நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது உடல் பருமனை குறைக்கும். இது உடலின் சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும், கெட்ட கழிவுகளை வெளியேற்றும். இந்த ஜூஸ் வயிற்றுக் கோளாறுகளையும் செரிமான கோளாறுகளையும் சரி செய்யும். சிறுநீரக கல்களை கரைக்கும் வலிமையும் கொண்டது. நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இதை அடிக்கடி குடித்தால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

எலுமிச்சைச் சாறு மற்றும் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால், பருக்கள், கரும்புள்ளிகள், தோல் சுருக்கம் போன்ற தோல் பிரச்சனைகள் நீங்கும். தலைமுடி வேர்க்கால்கள் வலுவடைந்து, முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.

எலுமிச்சை ஜூஸை எப்போதும் தண்ணீரில் கலந்து மட்டுமே குடிக்க வேண்டும்; அப்படியே குடித்தால் பற்கள் சேதமடையும். தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும், வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் எலுமிச்சைச் சாறு குடிக்க கூடாது.

எலுமிச்சை பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் அல்லது ஜூஸாக உண்டு வந்தால், உடலுக்கு தேவையான விட்டமின் சத்துகள் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது பல விதமான நோய்கள் வராமல் உடலை காக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments