Sunday, March 22, 2026
HomeUncategorizedமுருங்கை பிசின் உடம்பில் இவ்ளோ விஷயத்தை பண்ணுமா? அட!இது தெரியாம போச்சே!

முருங்கை பிசின் உடம்பில் இவ்ளோ விஷயத்தை பண்ணுமா? அட!இது தெரியாம போச்சே!

முருங்கை மரம் ஒரு கற்பக விருட்சம் ஆகும். இதன் பூ, பிஞ்சு, காய், விதை, வேர் மற்றும் பிசின் ஆகியவை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முறையாக பயன்படுத்தினால், என்றும் இளமையாக நம்மை வைத்திருக்க முடியும்.

 முருங்கை பிசினின் மருத்துவ குணங்கள்: 

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் இயற்கை மருந்தாக முருங்கை பிசின் உள்ளது, இதில் விட்டமின்கள், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன. ஆண்மை குறைவை போக்கும், விந்துக்கள் அதிகரிக்கச் செய்யும், உயிரைப் பெருக்கும். அனைத்து உறுப்பு மண்டலங்களுக்கும் வலுவூட்டும். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும். குழந்தையின்மைக்கு சிறந்த மருந்து, உணவில் எடுத்துக் கொண்டால் சிரட்டோசின் அதிகமாக சுரக்கும். இதனால் மனப்புத்துணர்ச்சி மற்றும் உடல் சுறுசுறுப்பு உற்சாகம் அதிகரித்து இன்புற்று வாழலாம்.

 மன அழுத்தத்தை போக்கும் :

ரத்த அழுத்தத்தையும், சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் அற்புதமான மருந்து. தசை பலவீனத்தை போக்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும், எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமல் தடுக்கும், தலைவலி, ஜுரம், உடல் சோர்வுக்கு சிறந்த மருந்து, இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

 உணவாகும் முருங்கை பிசின் :

முருங்கை பிசின் நாட்டு மருந்து கடைகளிலும், சிலர் வீட்டுமுருங்க மரங்களிலும் கிடைக்கக் கூடியது. இதை எடுத்து நன்றாக சுத்தம் செய்து, காய வைத்துக் கொள்ளவும், பசு நெய் சேர்த்து இரண்டு முதல் நான்கு நிமிடம் வரை வறுத்தெடுக்கவும். பின்பு ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். இந்த பொடியை தினமும் காய்ச்சிய பாலில் அரை ஸ்பூன் சேர்த்து உணவிற்குப்பின் குடிக்கவும். பத்தே நாளில் நல்ல பலன்களை காண்பீர்.

 முருங்கை பிசின் பால் சர்பத் :

முருங்கை பிசினை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதனுடன் காய்ச்சிய பால், சிறிது ஏலக்காய் பொடி, மற்றும் வெள்ளம் சேர்த்து குடிக்கலாம்.
இதை தொடர்ந்து குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும், உடல் கட்டுக்கோப்பு மேம்படும். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு வலுவூட்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments