தினமும் நம் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது நம் அன்றாட தேவைகளுக்கு என்றாலும், நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையாவது வருங்காலத்திற்காக நாம் சேமித்து வைப்போம் .அப்போதுதான் அவசர காலகட்டத்தில் யார் உதவியும் நாட தேவையில்லை. ஆனால் சிலருக்கு கையில் பணம் தங்கவே தங்காது. அதாவது சம்பாதிக்கும் பணம் அந்த மாதமே செலவாகிவிடும். அதே போல் கையில் பணம் நிற்கவே மாட்டேங்குது என்று பல பேர் புலம்பியும் நாம் கேட்டு இருப்போம்.
அவர்களுக்கு அடுத்தடுத்து ஏதாவது செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி இருப்பதற்கு ஒருவருடைய பிறப்புக்கான ராசி பலன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் இந்த நான்கு ராசியில் பிறந்தவர்கள் கையில் பணம் நிக்கவே நிக்காது என்று கூறுகின்றனர். அது எந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினர் நிகழ் காலத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் பொருள் பிடித்து விட்டது என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வாங்கி விடுவார்கள். நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் அதிக அளவில் செலவு செய்து விடுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு தொழில் நுட்ப பொருட்கள் மீது அதிக அளவில் விருப்பம் இருக்கும். அதோடு இவர்கள் தங்களை எப்பொழுதும் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். விளைவாக ஆடம்பர செலவு அதிகம் செய்வார்கள். அதனால் இவர்கள் கையில் பணம் தங்குவது சற்று கடினமாக இருக்கும்.
சிம்மம்:
இவர்கள் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பிறர் முன்பு தன்னை அழகு படுத்திக் கொள்ள அதிக அளவில் செலவு செய்வார்கள். சொகுசு வாகனம், நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமயங்களில் வங்கியில் கடன் வாங்கியாவது அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் அவர்கள் மன அழுத்தம் குறைக்க அதிக அளவில் செலவு செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவது அவர்களுக்கு அதிக அளவில் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதால் மன தடுமாற்றம் அடைந்து சேமிப்பை கரைத்து விடுவார்கள். பிறகு அதை எண்ணி கவலை அடைவார்கள்.

