Monday, March 23, 2026
HomeUncategorizedஅழகான தனுஷ்கோடி அழிந்த கதை தெரியுமா உங்களுக்கு? ஒரு சின்ன ரீவைண்ட்!

அழகான தனுஷ்கோடி அழிந்த கதை தெரியுமா உங்களுக்கு? ஒரு சின்ன ரீவைண்ட்!

1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயல் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்கு பகுதியையும் 1964 டிசம்பர் 22 முதல் 25 வரை தாக்கியது. 1,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் புயலால் முழுவதும் அழிந்து போனது.

 தனுஷ்கோடி அழிவுகள்: 

இந்தியாவில், தனுஷ்கோடி ஒரு மீனவ நகரமாக இருந்தது, 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்டது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது, சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது, இதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று அழைத்தனர். இந்த அலை 40 முதல் 50 அடி உயரம் வரை எழும்பியது.

danushkodi

அதிகாலை 3 மணியளவில், ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் முன்னூறுக்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்தனர். இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடையே பாம்பன் தொடருந்து தடம்கொண்ட பாலம் பேரலையில் உடைந்தது. மேலும், 23 நள்ளிரவுக்கு 5 நிமிடம் முன்பு பாம்பன் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி உள்ளூர் பயணி வகை தொடரி தனுஷ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடையும் போது ஒரு பேரலையால் அடித்துக் கவிழ்க்கப்பட்டு, அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.

தனுஷ்கோடி அடியோடு அழிந்து, மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை, ஆனால் இன்றும் சில மீனவ குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

1964 டிசம்பர் 22 அன்று, இலங்கையின் வடக்கு பகுதியை புயல் தாக்கியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான வீடுகளும், மீனவர்களின் கபல்களும் அழிந்துவிட்டன. பல நெல் வயல்களும் பாதிக்கப்பட்டன. மன்னாரில் பெரும் சேதமும், திருக்கோணமலை துறைமுகமும் சேதமடைந்தன. இந்த அழிவுகளால்  அதிகம் மீனவர்கள் கடலில் மாயமானார்கள்.

கம்பிப்பாடு பகுதியிலிருந்து அரிச்சல்முனை வரையிலான தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் வழக்கமானதை விட அதிகமாக இருந்தது. கடல் நீர் தடுப்புச் சுவரை மோதி சாலை வரை வெள்ளமாக ஓடியது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்து, செல்போனில் வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்து ரசித்தனர். அதே சமயம், தனுஷ்கோடி மீனவர்கள் கடல் சீற்றத்தால் கவலையில் ஆழ்ந்தனர், படகுகளை காப்பாற்ற போராடினர். கடலில் 5 கிமீ தூரம் வரை அலைகள் எழுந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு இன்று அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments