Home Uncategorized இனி சுண்டக்காய பார்த்தவுடனே ஓடாதீங்க! உடம்புக்கு ரொம்ப நல்லது!

இனி சுண்டக்காய பார்த்தவுடனே ஓடாதீங்க! உடம்புக்கு ரொம்ப நல்லது!

வாரம் ஒருமுறை சுண்டைக்காய் உண்டால், உடலில் நிகழும் அதிசயங்களை நாம் காணலாம். சுண்டைக்காய் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று, தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்படும் இந்த செடி, நம் உடல் நலத்தை பாதுகாக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை தடுக்கிறது. சுண்டைக்காயை பச்சையாகவோ அல்லது வத்தலாகவோ உண்ணலாம்.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

இதில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், கால்சியம், விட்டமின்கள், இரும்பு சத்து மற்றும் பல நன்மைகளை தரும் வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலுவை தரும், எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

சிறுவர்களிலிருந்து குழந்தைகள் வரை, வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். செரிமான கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளுக்கு இது ஒரு அரிய மருந்து. வாய்ப்புண், குடல் புண், மூலம் நோய் உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் விரைவில் குணமாகும்.

பசியின்மையை போக்கி, உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கும். சளி, வாந்தி, மயக்கம், ரத்தம் மூலம் சிறுநீரகத்தில் எரிச்சல், நாள்பட்ட ரணங்கள் ஆறும் போது சுண்டைக்காய் ஒரு அற்புதமான மருந்தாகும். சிறுநீரகத்தை சுத்திகரித்து பாதுகாக்கும்.

உணவாகும் சுண்டக்காய்:

நீரழிவு நோய், நீரழிவு நோயால் உண்டாகும் உடல் நடுக்கம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களை குணமாக்க சுண்டக்காய் பித்தளை நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் குடித்து வர நோய்கள் குறைந்து ஆரோக்கியம் அடையலாம். மூலநோய் குணமாக வெங்காயம், பூண்டு, பச்சை சுண்டைக்காய் இவற்றை இடித்து நெய் அல்லது நல்லெண்ணெய் வதக்கி, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.

பெப்டிக் அல்சர் என்று சொல்லக்கூடிய குடல் புண்ணை அழித்து நெஞ்செரிச்சல் வாய்வுத் தொல்லை போன்றவை குணமாகும். மார்பு சளி உள்ளவர்கள் சுண்டக்காயை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மார்பு சளி நீங்கும் . உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெற்று  உடல் முழு ஆரோக்கியம் பெறும். ஏற்கனவே நோய் பாதிப்பில் உள்ளவர்கள் மன அழுத்தம் சுண்டைக்காய் முறையாக உணவில் சேர்த்து வந்தால் அனைத்து விதமான நோய் பாதிப்புகளிலும் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Exit mobile version