Monday, March 23, 2026
HomeUncategorizedபலாக்கொட்டையை தூக்கிபோடாதீங்க! எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? சூப்பர் டிப்ஸ்!

பலாக்கொட்டையை தூக்கிபோடாதீங்க! எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில் கிடைக்கும் பலாப்பழம் சுவையும், சத்தும் நிறைந்ததாகும். இதன் விதைகள் பழத்தை விட அதிக சத்துக்களை கொண்டிருக்கும். பலர் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுவர், ஆனால் சிலர், அந்த கொட்டைகளை மாடியில் காயவைத்து இருப்பதை நாம் பார்த்து உள்ளோம். அது ஏன் தெரியுமா? ஏனெனில் பலாக்கொட்டையில் உடல் நலத்திற்கு உகந்த நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களை உண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். பலாப்பழம் ஒரு சத்தான இயற்கை வழங்கும் முக்கியமான பழமாகும்.

பலாக்கொட்டையில் பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம், இரும்பு, காப்பர், விட்டமின் ஏ, விட்டமின் பி போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் புரதமும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது.

 பலாக்கொட்டையின் மருத்துவ குணங்கள் : அதிக புரதம் நிறைந்த சைவ உணவுகளில் ஒன்றாகும், சரும பொலிவுக்கு தேவையான நல்ல ஊட்டச்சத்து கொண்டுள்ளது. தோல் சுருக்கம், பலவீனம் சரிசெய்யும், தலைமுடி வேர்களை வலுப்படுத்தும். இது முடி உதிர்வதை தவிர்க்க உதவும். அதிக இரும்புச் சத்து கொண்டுள்ளதால் ரத்த சோகையை தவிர்க்க உதவும், விட்டமின் ஏ கொண்டுள்ளதால் பார்வை தெளிவாகும், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்த ஓட்டம் சீராகும், கெட்ட கொழுப்புகள் குறையும்.

 பலாக்கொட்டை உணவு: பலாக்கொட்டையை வேகவைத்து தோல் நீக்கி உண்ணலாம் அல்லது உணவில் சேர்த்து உண்ணலாம்.
பலாக்கொட்டை புரோட்டின் பவுடர்: பல கொட்டைகளை சேகரித்து வெயிலில் காயவைத்து தோல் நீக்கி பொடி செய்து கொள்ளலாம். கோதுமை மாவு அல்லது தோசை மாவில் கலந்து தோசை செய்து உண்ண வலுவான புரோட்டின் கிடைக்கும், தசை கட்டமைப்பு வலுப்பெறும், உடல் எடை அதிகரிக்கும், உடல் சோர்வு நீங்கும். பலாக்கொட்டையின் நன்மைகளை அறிந்து, இனி அவற்றை தூக்கி எறியாமல் முறையாக பயன்படுத்தி நன்மைகளை பெறுவோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments