Sunday, March 22, 2026
HomeUncategorizedஎன்னையும், என் மகளையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் - கடுப்பான வனிதா விஜயகுமார்!

என்னையும், என் மகளையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் – கடுப்பான வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்து இருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இதில், ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண் என பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கும் இப்படப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு நடிகை வனிதா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் பேசி இருப்பது பின் வருமாறு:

அதில், மிஸஸ் & மிஸ்டர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக இணையவாசிகள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு கணவன் மனைவிக்குள் யதார்த்தமாக நடக்கும் விஷயத்தை தான், நான் படத்தில் வைத்து இருக்கிறேன். பெரும்பாலானோர் படத்தை பார்த்துவிட்டு, மாடர்ன் பாக்யராஜ் படத்தை பார்த்தது போல இருந்தது என்று சொன்னார்கள். அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஏனென்றால், ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்ய என்பதைத்தான் பாக்யராஜ் முந்தனைமுடிச்சி படத்தில் சொல்லி இருப்பார். அதில் ஆபாசம் இருக்காது, ஆனால், எதார்த்தம் இருக்கும், வெளிகுத்தனம் இருக்கும், அதைத்தான், நான் இந்த படத்தில் காட்டியிருக்கிறேன். அவர் படத்தில் இருபது போல வெகுளித்தனமும், யதார்த்தமும் தான் இந்த திரைப்படத்திலும் இருக்கும் ஆபாசம் இருக்காது.

அந்த காலத்தில் பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் சோசியல் மீடியா இல்லை. இந்த காலத்தில் சோசியல் மீடியா எதை எடுத்தாலும் ரோல் செய்து அதை பெரிதாக்கி விடுகிறார்கள். அண்மையில், நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அந்த நிகழ்ச்சிகள் தேவயானி பின்னாடி நின்று கொண்டு இருந்தார், உடனே கமெண்ட் பாக்ஸில் தேவயானி முன் திமிராக உங்காந்து இருந்த வனிதா என்று எழுதி இருந்தார்கள் . அவர்களுக்கு என்ன தெரியும் நானும் தேவயானியும், ஒரே கால கட்டத்தில் சினிமாவிற்கு வந்தோம். நாங்கள் நல்ல நண்பர்கள் . அதுமட்டுமில்லாமல் நான் தேவயானியின் ஃபேன், அதன் பின் நாங்கள் என்ன பேசினோம் என்று கமெண்டை எழுதியவர்களுக்கு தெரியுமா?

இணையத்தில் தேவயானியின் மகளின் போட்டோவையும், என்னுடைய மகளின் போட்டோவை போட்டு கம்பேர் செய்து, செய்தி வெளியிடுகிறார்கள். யாரை யாருடன் கம்பேர் செய்து பேசுவது, யாரையும் யாருடனும் கம்பேர் செய்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஜோவிகா என் மகளாக இருந்தாலும், நானே ஒப்பிட்டு பேசிக்கொள்ள முடியாது. அவள் வேறு, நான் வேறு. 

அந்த காலத்தில் குஷிப்படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டி நடித்திருந்தார். அந்த படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். இப்போது, ஜோவிகாவின் இடுப்பிலேயே கேமராவை வைத்து புகைப்படங்களை எடுத்து அதை ட்ரெண்ட்ராகி விமர்சனம் செய்து வருகிறார்கள். எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுக்கட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரே ஒரு விஷயத்தை இதன் மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கமெண்ட் எழுதும் இடத்தில் நீங்க இருக்கீங்க, கமெண்டை உருவாக்கும் இடத்தில் நான் இருக்கிறோம் என நடிகை வனிதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments