Home செய்திகள் நடிகை கௌதமி புகார் எதிரொலி: தொழிலதிபர் அழகப்பன் வீடுகளில் ED அதிரடி சோதனை!

நடிகை கௌதமி புகார் எதிரொலி: தொழிலதிபர் அழகப்பன் வீடுகளில் ED அதிரடி சோதனை!

நடிகை கௌதமிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணத்தைப் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட காலத்தில், அவரது சொத்துக்களை விற்பனை செய்ய அழகப்பனிடம் ‘பொது அதிகார ஆவணம்’ (Power of Attorney) வழங்கியதை தவறாகப் பயன்படுத்திய அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை முறைகேடாகத் தங்கள் பெயர்களுக்கு மாற்றியதோடு கௌதமியின் வங்கிக் கணக்கில் இருந்தும் பெரும் தொகையைத் தங்களுக்கு மாற்றிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாகக் கௌதமி அளித்த புகார்களின் பேரில் ஏற்கனவே காவல்துறையினரால் ஏழு எஃப்.ஐ.ஆர்கள் (FIRs) பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணமோசடி (Money Laundering) குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருக்கும் நிதி ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைத் திரட்டும் நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த அதிரடித் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version