சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரனிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிநபர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடங்களை அமலாக்கப் பிரிவு தற்போது ஆய்வு செய்து வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

