Home Uncategorized “உங்கள இனி யாரும் நம்ப மாட்டாங்க” எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

“உங்கள இனி யாரும் நம்ப மாட்டாங்க” எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 525 அறிவிப்புகளில் கால் பங்கு கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு தற்போது பொதுமக்களை வாட்டி வதைக்கும் அரசாகத் திகழ்வதாகவும் அவர் சாடினார்.

தேர்தல் வரும்போது மட்டும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு, வெற்றி பெற்ற பின் அவற்றை மறப்பதே திமுகவின் கொள்கை எனத் தெரிவித்த அவர், அதிமுக ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும், ஸ்டாலின் எத்தனை முறை எங்குப் பொதுக்கூட்டம் நடத்தினாலும் மக்கள் அவரை இனி நம்பப் போவதில்லை என்றும் அவர் உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version