Wednesday, February 4, 2026
HomeUncategorizedபுதுக்கோட்டை கம்பன் கழகத்தின் எட்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் எட்டாம் நாள் சிறப்பு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் எட்டாம் நாள் நிகழ்ச்சியானது  புதுக்கோட்டை நகர் மன்றம் “தமிழ்ச்செம்மல்”ரா.சம்பத் குமார் அரங்கில் 25 -7 -2025  வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்ற முதல் அமர்வானது கம்பன் கழகத் துணைப்பொருளாளர் திரு.கறு.ராமசாமி அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. 

      புதுக்கோட்டை மாநகராட்சி தலைவர். திருமதி. திலகவதி செந்தில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி,  புதுக்கோட்டை கம்பன் கழகத்தால் நடத்தப்பட்ட  பல்வேறு இலக்கியப் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு  பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.

    சிறப்புநிலையில் தேர்வான பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கும், அவர்கள் சார்ந்த நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியோர்களுக்கும், புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள்  சுழற் கேடயங்கள் வழங்கி  பாராட்டினார். 

        புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கூ. சண்முகம்  அவர்கள் வாழ்த்துரை வழங்க ,  ஜெ.ஜெ.கல்லூரிகள்  திருப்பதி கவிதா சுப்பிரமணியம் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

       முக்கிய பிரமுகர்கள்  முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியின் நிறைவில்  திருமதி ரேவதி செல்லதுரை அவர்கள்  நன்றி உரை ஆற்றினார்.

       இரண்டாம் அமர்விற்கு  தமிழக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.ரகுபதி அவர்கள் தலைமை ஏற்றார். இதில்  “கம்பன் காட்டும் விவாதம் குழப்பம் விளைவிக்கிறது” என்கிற தலைப்பில் சொல்வேந்தர். திரு.சுகி சிவம் அவர்கள் நடுவராகப் பங்கேற்ற  வழக்காடு மன்றம் நடைபெற்றது. முனைவர். சி. விசாலாட்சி வழக்கு தொடுக்க, முனைவர். திரு.இராதாகிருஷ்ணன் மாது வழக்கை மறுத்து வாதாடினார். 

     முக்கிய பிரமுகர்கள் பலரும் முன்னிலை வகித்தனர். அமர்வின் நிறைவில் தா.முரளிதரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.  இரு அமர்வுகளையும் புதுகை.ச.பாரதி அவர்கள் தொகுத்தளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments