எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன. இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
