சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று தேர்தல் ஜுரம் உச்சம் தொட்டிருக்கிறது. ‘தளபதி’ விஜய்யின் வருகைக்காகக் காரைக்குடியே ஸ்தம்பித்துக் கிடக்க, “யாராவது ஆர்வம் தாங்காமல் கம்பி மேல ஏறி வித்தை காட்டிவிடுவார்களோ?” என்ற பயத்தில், ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் ‘ஸ்பெஷல்’ தடுப்புகளால் லாக் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், பொதுக்கூட்டம் நடக்கும் சாலையோரங்களில் தகர ஷீட்டுகளைக் கொண்டு இரும்பு அரண் அமைத்து, ஏதோ கோட்டைக்குள்ளே விஜய் வருவது போன்ற ஒரு பில்டப்பை போலீஸார் கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
“தகரம் தான் தடுக்குது… ஆனா தம்பிங்களோட ஆர்வத்தைத் தடுக்க முடியுமா?” என்பது போல, இந்தத் தகரத் தடுப்புகளையும் தாண்டித் தலைவனைப் பார்க்கக் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்க, பாதுகாப்புப் படையினரோ “யாரும் கம்பி மேல ஏறாதீங்கப்பா!” என்று மைக் பிடித்துக் கெஞ்சாத குறையாகக் கவனித்து வருகிறார்கள்.

