Tuesday, March 10, 2026
HomeUncategorizedயானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்?

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்?

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்? அதன் பின் உள்ள ஆன்மிகக் காரணங்கள். இதோ விரிவாக இந்தப் பதிவில் காண்போம்…

யானை மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது. யானையிடம் பல அதிசயிக்கத்தக்க விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை. இது யானைகளுக்கு மட்டுமே உண்டு.

மனிதர்களுக்குக் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித் துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும்.

சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர்.

இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்கள் தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசனப் பயிற்சிகளாகும்.

யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இது காட்டு விலங்காக இருந்தாலும் அதைப் பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது.

இப்படிப்பட்ட தெய்வீக அம்சம் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments