Sunday, April 12, 2026
Homeசெய்திகள்மறைந்தது இன்னிசைக் குயில்..இந்திய இசையுலகிற்கு பேரிழப்பு!

மறைந்தது இன்னிசைக் குயில்..இந்திய இசையுலகிற்கு பேரிழப்பு!

இந்தியத் திரையிசை உலகின் ஈடு இணையற்ற குரலரசி, ‘பின்னணி இசைத் திலகம்’ ஆஷா போஸ்லே (92) மும்பையில் இன்று (12.04.2026) காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் இயற்கை எய்தினார்.

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது இசைப் பயணத்தில், தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்தவர்.

தமிழில் ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ (சந்திரமுகி), ‘ஓ பட்டாம்பூச்சி’ (காதல் அழிவதில்லை) போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் தமிழக மக்களின் மனங்களை வென்றவர்.

குறிப்பாக, பாடும்போது அவர் காட்டும் துள்ளலும், நளினமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவை.

மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகளைப் பெற்ற ஆஷா போஸ்லே, இரண்டு தேசிய விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட எண்ணற்ற பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஒரு பெரும் சகாப்தத்தைப் படைத்தவர். அவரது மறைவு இந்தியத் திரையிசைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments